Tuesday, 2 July 2019

Gooseberry pickle

நெல்லிக்காய் ஊறுகாய் 

Image may contain: table, food and indoor

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்                          - 10
பூண்டு                                       - 2 டேபிள் ஸ்பூண்
இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூண்
மிளகாய் பொடி                      - 3 டேபிள்ஸ்பூண்
கடுகு                                          - 1/2 டீஸ்பூண்
காயப்பொடி                            - 1/4 டீஸ்பூண்
வெந்தயப் பொடி                    - 1/2 டீஸ்பூண்
நல்லெண்ணை                        - முக்கால் கப்
வினாகிரி                                   - முக்கால் கப்
உப்பு                                            - 2 டேபிள்ஸ்பூண்
கறிவேப்பிலை                         - 2 தண்டு

செய்முறை :
*நெல்லிக்காயை ஒரு ஸ்ட்டீமரில் வைத்து 8 மினிட் நேரம் ஸ்ட்டீம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு சீனச் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
* எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
* கடுகு பொட்டியதும், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* நன்றாக வதங்கி ப்ரவுன் கலர் ஆகும் போது அடுப்பை அணைத்து விடவும்.
இதில், மிளகாய் பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
* இதனுடன் நெல்லிக்காய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
* இதனுடன் உப்பு,காயப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
* இறுதியாக, வினாகிரி சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
* நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.


0 Comments:

Post a Comment