Sunday, 7 July 2019

கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கிபாத்


கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கிபாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான_பொருட்கள் :
அரிசி - 1 கப்
கத்திரிக்காய் - 150 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
முந்திரி பருப்பு - 15
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
புளித்தண்ணீர் - கால் கப்
உப்பு - தேவைக்கு.

வாங்கிபாத்பொடி :
முழு மல்லி - 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
கடலை பருப்பு - 1 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2 ,
பட்டை - சிறு துண்டு,
கிராம்பு - 1
கொப்பரை தேங்காய் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
* அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.
* கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
* இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
* எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்த்து இறக்கவும்.
* சுவையான வாங்கி பாத் ரெடி.
* வாங்கி பாத் பொடி கடைகளில் கிடைக்கும்.


0 Comments:

Post a Comment