Tuesday, 2 July 2019

அம்மான் பச்சரிசி இலை

அம்மான் பச்சரிசி இலையின் முற்றிய இலைகளை தவிர்த்து இளம்இலை மற்றும் கொழுந்து இலைகளை தண்டோடு பறித்து தண்ணீரில் அலசி வாயில் போட்டு நன்கு மென்று தின்றால்,

ரத்தத்தை சுத்தமடையச் செய்யும். 

வாய், உதட்டு புண்களை விரைவில் ஆற்றும்.

உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

வாத நோயை துரத்தியடிக்கும்

இதன் பாலை மருவில் தடவி வந்தால் மரு உதிரும்.

இதன் பூக்களை பாலுடன் சேர்த்து அரைத்து பாலுடன் காலையில் பருகி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இலைகளை அரைத்து மோருடன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் ஐந்து நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைபடுதல் நின்று போகும்.

இதன் இலையையும் தூதுவளை இலையையும் சம அளவு எடுத்தரைத்து அதனுடன் பாசிப்பருப்பு உளுத்தம் பருப்பு மாவையும் சேர்த்து உடன் தேங்காய் துருவலோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்பட்டு விந்து உற்பத்தியைத் தூண்டி விடும்.

0 Comments:

Post a Comment