Monday, 8 July 2019

பால் சாதம் 


தேவையானவை: 
அரிசி                          – ஒரு கப், 
பால்                            – கால் கப் (காய்ச்சியது),
சர்க்கரை                  – அரை கப்,
முந்திரி, திராட்சை – தலா 5,
நெய்                           – கால் கப்.

செய்முறை:
அரிசியை சாதமாக வடிக்கவும். முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். பாலுடன் சர்க்கரையை கலக்கவும். கடாயில் நெய் விட்டு… சாதம், பாலுடன் கலந்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி… வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து, சாப்பிடக் கொடுக்கலாம்.
குறிப்பு: 
கலர்ஃபுல்லாக தயா ரிக்க விரும்புபவர்கள், சிறிதளவு பாலில் கேசரி பவுடர் கலந்து சேர்க்கலாம்.

0 Comments:

Post a Comment