Monday, 8 July 2019

மாங்காய் சாதம்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், மாங்காய், வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, பெருங்காயத்தூள், எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 
மாங்காயை சுத்தம் செய்து துருவவும். கடாயில் எண்ணெயை காய வைத்து… கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி… உப்பு, மாங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, இறக்கியதும் உதிர் உதிராக வடித்த சாதத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:
மாங்காய் கிடைக்காத சமயத்தில், க்ரீன் ஆப்பிளில் இந்த சாதம் தயாரிக்கலாம்.

0 Comments:

Post a Comment