Monday, 8 July 2019

கடுகு சாதம் 




தேவையானவை: 
வடித்த சாதம் – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4,தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், புளி – சிறிதளவு, பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.

செய்முறை:
எண்ணெயில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், புளி சேர்த்து வறுத்து எடுத்து… கடுகு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் பொடிக்கவும். அதே எண்ணெயில் பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வடித்த சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்தால்… கடுகு ரைஸ் ரெடி!

குறிப்பு: இது, மைசூர் ஸ்பெஷல் ரெசிபி.

0 Comments:

Post a Comment