Tuesday, 2 July 2019

பசுமஞ்சள் பால்

Image may contain: drink

தேவையான பொருட்கள் :

அரை மூடி தேங்காய் பால் 
இஞ்சி - ஒரு இன்ச் அளவு 
பசு மஞ்சள் - 2 இஞ்ச் அளவு 
மிளகு - 1 டீ ஸ்பூன்
பட்டை - சிறிது
ஏலக்காய் - 1

செய்முறை:

முதலில் மிக்ஸியில் இஞ்சி, பசுமஞ்சள், மிளகு , பட்டை, ஏலக்காய் இட்டு அரையுங்கள். அடுத்து தேங்காய் போட்டு பால் எடுக்கும் பதத்திற்கு அரைக்கவும். 

இதனுடன் 400 மிலி தண்ணீர் சேர்த்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளுங்கள். வருகின்ற பாலை அப்படியே குடிக்கலாம். அல்லது பிரிட்ஜில் சிறிது நேரம் குளிர்வித்து குடிக்கலாம். அல்லது மிதமாக சூடு பண்ணி குடிக்கலாம். கொதிக்க விட கூடாது. திரிந்து விடும்.

0 Comments:

Post a Comment