Monday, 8 July 2019

ஓமத்தட்டை

Image may contain: food
தேவையான பொருட்கள்
ஓமம் – 100 கிராம்,
மைதா மாவு – 250 கிராம், வெண்ணெய் – 4 டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, 
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
ஓமத்தை தண்ணீரில் அலசி எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.
மைதா மாவு, உப்பு, வெண்ணெய், பொடித்த ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவை தட்டைகள் போல் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஓம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த தட்டையை ஓமம் சேர்க்காமலும் செய்யலாம். பிறகு அதைப் பொரித்து ஜீராவில் போட்டு பரிமாறலாம்.

0 Comments:

Post a Comment