Tuesday, 2 July 2019

மாம்பழ கேசரி

Image may contain: food
தேவையான பொருட்கள்:
முழு மாம்பழம் - 1
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - கால் கப்
திராட்சை - சிறிதளவு
ரவை - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் ( தேவைக்கு ஏற்ப)
ஏலக்காய் - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்


செய்முறை:
மாம்பழத்தில் உள்ள தோலை நீக்கி விட்டு சதைப்பகுதிகளை குழைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.
பின் ரவை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
பொன்னிறமாக மாறும்போதே அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி அதோடு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைக் கொட்டிக் கிளறவும்.
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
வறுத்த முந்திரி, திராட்சைச் சேர்த்துக்
கிளறவும்.
இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் மாம்பழச் சதையைக் கொட்டிக் கிளறி இறக்கிவிடவும்.
சுவையான மாம்பழ கேசரி தயார்.

0 Comments:

Post a Comment