Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 19 June 2019

இலங்கை யாழ்பாணத்து இடியப்பம்

Image result for இடியப்பம்
தேவையான பொருள்கள்:

அரிசிமாவு                              – 11/2கப்
அவித்த கோதுமைமாவு     – 1/2கப்
உப்பு                                       – 1டீஸ்பூன்(தேவையான அளவு)
சுடு தண்ணீர்                       – 2கப்
செய்முறை:
அரிசிமாவு, அவித்த கோதுமைமாவு, உப்பு ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
அதனுள் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிண்டவும்.
பின்னர் குழைத்த மாவினை இடியப்ப அச்சில் போட்டு இடியப்பத் தட்டில் இடியப்பங்களை பிழியவும். பின்னர் அவற்றை இட்லி பானைஇல்அடுக்கி அவித்தெடுக்கவும். சுவையான, “இடியப்பம் ரெடி.

டிப்ஸ்: தண்ணீரை நன்கு பொங்க பொங்க கொதிக்கவிட்டு ஒரு கோப்பையில் ஊற்றி வைத்து சிறிது ஆவி அடங்கியதும் மாவில் ஊற்றி குழைக்கவும். இப்படி செய்தால் இடியப்பங்கள் மென்மையாக வரும்.

குழல் புட்டு

Image result for குழல் புட்டு

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு              - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய் 
தண்ணீர்
உப்பு


செய்முறை :
தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இந்த தண்ணீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகி விடக் கூடாது. மாவு மாவாகவே இருக்க வேண்டும். ஆனால் மாவில் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது குழாய் புட்டு செய்வதற்கான பாத்திரத்தின் அடியில் தண்ணீர் ஊற்றிவிட்டு, அப்பகுதியை மூடிவிட்டு ஒரு கைப்பிடி புட்டு மாவை குழாயினுள் போட வேண்டும்.
பின்னர் ஒரு கைப்பிடி தேங்காய் துருவலைப் போட வேண்டும். பின்னர் மாவு, தேங்காய் துருவல் என அந்த குழாய் முடியும் வரை மாற்றி மாற்றி நிரப்பி மூடி விட வேண்டும்.
பின்னர் குழாய் புட்டு பாத்திரத்தை சுமார் 5 முதல் 8 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கிவிடுங்கள்.

அழகான நீளமான குழாய் புட்டு தயார். உடைந்தாலும் கவலையில்லை. அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்.
இடி சம்பல் ,வாழைப்பழத்துடனும் சாப்பிட நன்றாக இருக்கும்

வாழைப்பழ வாய்ப்பன்

தேவையானவை:
கோதுமை மாவு             -  500g
சீனி                                   -  200g
பழுத்த வாழைப்பழம்  - 1
பேக்கிங்பவுடர்               - 2 மே.க
மாஜரீன்                            - 1 மே .க
தண்ணீர்                          - தேவையான அளவு
உப்பு                                  - சிறிதளவு
எண்ணெய்                       - பொரிப்பதற்கு


செய்முறை :

கோதுமை மா, சீனி ,வாழைப்பழம் ,மாஜரீன் , பேக்கிங்பவுடர் ,உப்பு ,ஆகியவற்றைச்சேர்த்து நன்கு பிசைந்து குழைக்கவும். அதன் பின் சிறிது சிறிதாக நீரை தெளித்து குழைத்து (மா தளர்வாக இருக்க வேண்டும்) சிறுசிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும். குண்டு குண்டு வாய்ப்பன் ரெடி


இலங்கை ஸ்பெஷல் 'தொதல்'

Image result for தொதல்


இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை ஆகும். இதனை பலர் பல முறையில் செய்வார்கள். இங்கு கொடுத்திருப்பது மிகவும் சுலபமான முறை.
இது நானே தயாரித்து அம்மாவின் கிராமத்து சமையலில் பதிவிடுகின்றேன்.

தேவையான பொருட்கள்
தேங்காய்பால் - 3 டின்
சிவப்பு அரிசிமா - 1டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
தண்ணீர் - 1டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
சர்க்கரை-600 கிராம்
வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி
கஜு (முந்திரி) - 20
ஏலக்காய் - சிறிது

செய்முறை
சர்க்கரையை சிறிய துண்டுகளாக
நொருக்கவும்.
முந்திரியை உடைத்து பட்டரில் வறுத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை பயறு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.
எண்ணெய் பிரிந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய் கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட்டு ஆற விடவும்.
சுவையான தொதல் ரெடி

சீரகம்

Image result for சீரகம்

Image result for சீரகம்
சீரகத்தின் பயன்கள் 
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.


* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.


* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.


* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.


* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.


* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.


* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.


* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.


* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.


* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.

முளைக்கட்டிய வெந்தயம்

Image may contain: food

சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப்பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.

பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.


பால் கோவா

Image result for பால்கோவா

தேவையானவை

பால்                            - ஒரு லிட்டர் (திக்கான பால்)
சீனி                            - 200 கிராம் (ஒரு கப் அளவை விட சிறிது குறைவு)
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
நெய்                           - 3 தேக்கரண்டி


அகலமான பெரிய நாண் ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை நன்றாகக் காய்ச்சவும். (ஒரு மரக் கரண்டியால் பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பாலாடையை வழித்து பாலில் சேர்த்துவிட்டு, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பால் நன்றாக வற்றுவதற்கு 30 - 40 நிமிடங்கள் ஆகக் கூடும்).

பால் நன்கு வற்றியவுடன் சீனியைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கரைந்து பால் கெட்டியானதும், நிறம் மாறி வரும்.
பால் கோவா வாசனை நன்றாக வரும் போது நெய் சேர்த்துக் கிளறி, பிறகு ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்நன்கு கெட்டியாகி பால் கோவா பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்

சுவையான பால் கோவா தயார்.

காச நோய்க்கு மருந்தாகும் கற்பூர வள்ளி

Image result for கற்பூர வள்ளி

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனை பல்வேறு நோய்கள் தீர்க்க பயன்படுத்தலாம். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

புகைப்பிடிப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

Image result for பேரிச்சம்பழம்

இயற்கையின் கொடையான பழங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
கண்பார்வை தெளிவடைய
பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள். இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.
வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது. இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
பெண்களுக்கு
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

Monday, 17 June 2019

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்

Image result for grounet plant

Image result for verkadalai
பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். ஆனால் இதன் சத்தினைக் கணக்கில்கொண்டு கொட்டை வகைகளில் சேர்த்துள்ளனர். நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான். இதன் தாய் நிலம், பிரேசில். அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். அப்படித்தான் இந்தியாவிலும் விருந்தாளியாய் வேர்விட்டது வேர்க்க்கடலை!
பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும்.

நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலை ஸ்பெஷல்.நம் சத்குரு நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி கூறியுள்ளார்.
நம் சத்குரு நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி கூறியுள்ளார். சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.

பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது. ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். வயிற்றில் நிகோடினிக் அமிலம் குறையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள நையாசின் இந்நிலையைச் சீர்செய்கிறது. புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும்.

வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

வேர்க்கடலையை வேகவைத்துச் சாப்பிடலாமா?
வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நன்று.

வேர்க்கடலை உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்காதா?
ஒரு தோசை வார்த்து எடுக்க இரண்டு, மூன்று தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்துகிறோம். ஒரு பிடி வேர்க்கடலையிலில் இருப்பதோ ஓரிரு துளிகள். அவை உடலின் கொழுப்புச் சத்தை அதிகரித்து விடாது.

உடலின் பித்தஅளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் அதிகரிக்காதா?
வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது. உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்!

வேர்க்கடலை பால்!
வேர்க்கடலை 2 கைப்பிடி அளவு (8 மணி நேரம் ஊறவைக்கவும்), ஆப்பிள் 1 (அ) சப்போட்டா (அ) நேந்திரம் (அ) செவ்வாழை (அ) பேரீச்சை… துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்… தேன் 2 டீ ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப…)
ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, சல்லடையில் அரித்து அல்லது அரிக்காமல் அப்படியே பருகலாம்!


நன்றி 

கீழ்க்காய்நெல்லி 

Related image

Image result for கீழ்க்காய்நெல்லி
கீழ்க்காய்நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.
கீழ்க்காய்நெல்லி சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்; இரத்த சோகையை குறைக்கும்; இரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும்; பசி உண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்.
கீழ்க்காய்நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை.
கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது.
ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படுகின்றது. கீழ்க்காய் நெல்லி, கீழ் வாய் நெல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.
கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் பழ அளவு ¼ லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும். இந்தக் காலத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.
கீழ்க்காய்நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி அளவு கீழ்க்காய்நெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.
வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும்.
தேவையான அளவு கீழ்க்காய்நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.
எலிக்கடி விஷம் குணமாக ஒரு பிடி கீழ்க்காய்நெல்லி இலைகளை எடுத்து 100 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, காய்ச்சிய எண்ணெயை கடி வாயில் தடவ வேண்டும். காய்ச்சி வறுத்த இலையை உட் கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும்.

தும்பைச்செடியின் நன்மைகள் 

Image result for தும்பை

விஷத்தையே முறிக்க கூடிய ஆற்றல் மிக்க “தும்பையை” இப்படி சாப்பிடுங்கள்.
அதிகளவு மூலிகைகள் தமிழகத்தின் கிராமங்களில், நாம் காணும்வண்ணம், சாலையோரங்களில், வயல் வெளிகளில் நிறைந்து காணப்படும். அவற்றுள் சிறந்த ஒரு மூலிகைச்செடிதான் தும்பை.

என்றும் வாடாத பசுமை நிறத்தில் சற்றே குறுகிய இலைகளுடன் நல்ல வெண் நிறத்தில் அமைந்த பூக்களைக் கொண்ட தும்பை, எல்லா கால நிலையிலும் காணப்படுபவை என்றாலும், தும்பைச்செடிகள் மழைக்காலங்களில் மணற்பாங்கான இடங்களில் அதிக அளவில் வளரும் தன்மைமிக்கவை. தும்பைச் செடியின் இலை, பூ, வேர்கள் உள்ளிட்ட முழுச்செடியும் மருத்துவ பலன்கள் தர வல்லவை என்றாலும், தும்பையின் இலைகளில் மிக அதிக அளவில், உடல் வியாதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கிறது.

தும்பை மலர்கள் பூத்துக் குலுங்கும் இடங்களில் அந்த மலர்களைச் சுற்றி, நிறைய தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எறும்புகள் இவை யாவும், காத்திருந்து தும்பை மலர்களில் உள்ள தேனை, சுவைத்துப் பருகி செல்லும். கிராமங்களில் சிறுவர்கள், சிறுமிகள் யாவரும் வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம், தும்பை மலர்களை பறித்து, மலர்களின் அடிப் புற காம்புகளில் வாயை வைத்து அதன் தேனை உறிஞ்சி பருகி, அதன் அற்புத இனிப்பு கலந்த மூலிகைச் சுவையில் மனம் குதூகலிப்பர். காசு கொடுத்து பாதிப்புகளை வாங்கும் நாகரீக நொறுக்குத் தீனிகளைவிட, கிராமங்களில் ஒரு பைசாவும் செலவில்லாமல், குழந்தைகளுக்குக் கிடைக்கும், பக்க விளைவுகள் இல்லாத, உடலுக்கு நன்மைகள் புரியும் இயற்கை தின் பண்டங்கள் இதுபோல ஏராளம் உண்டு.

தூய்மைக்கு அடையாளம் காட்டப்படுவது தும்பை மலர்கள், கிராமங்களில் பேச்சு வழக்கில் சில விசயங்களின் தூயத் தன்மைக்கு தும்பை மலர்களையே, உதாரணமாகக் கூறுவர். ஒருவரின் மனத் தூய்மையை உயர்வாகக் கூற, தும்பைப்பூப் போல, அவளோட மனசும் வெள்ளை என்பர், வயதில் மூத்தோர் தலையெல்லாம் நரைத்து பழுத்த பழமாக காணப்படும்போது, தும்பைப்பூப்போல, அவருக்கு தலையெல்லாம் வெள்ளை, என்பர். மேலும் மனத் தூய்மைக்கும் அடையாளமாக விளங்கும் தும்பை மலர்கள், இறைவனை வழிபட உகந்த மலர்களாக, குறிப்பாக, முருகப் பெருமானுக்கு சூட்ட, பூஜை செய்ய சிறந்த மலராகவும் விளங்குகின்றன.
தும்பை இலைச் சாற்றுடன் தேன் கலந்து தினமும் இரு வேளை பருகிவர, அடிக்கடி ஏற்படும் ஜலதோஷ பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். 

தும்பைச்செடியின் நன்மைகள்

மாதவிலக்கு சீராக :
சில பெண்மணிகளுக்கு உடலில் உள்ள வாதத் தன்மைகளால், அவர்களின் மாத விலக்கு சீராக நடைபெறாமல், தாமதிக்கும் தன்மைகள் காணப்படும்.
இந்த பாதிப்பை சரி செய்ய, தும்பை இலை, காட்டாமணி என அழைக்கப்படும் உத்தாமணி இலை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, அதில் விரல் நுனியளவு எடுத்து, பாலில் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மாத விலக்கு பாதிப்புகள் யாவும் விலகி விடும். எனினும் இந்த மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் அவசியம் உணவுக் கட்டுப்பாடு தேவை, உணவில், உப்பு, புளி மற்றும் காரம் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

கருப்பை பாதிப்பு :
தாய் மார்களின் கருப்பை பாதிப்புகள் நீங்க, தும்பை மலர்களை ஆட்டுப் பாலில் இட்டு காய்ச்சி, அந்தப் பாலை தொடர்ந்து பருகி வர, துன்பங்கள் தந்த கருப்பை பிரச்சனைகள் விலகி, உடல் நலமாகும்.

மூலம் :
தும்பை இலைச் சாறு மற்றும் துத்தி இலைச் சாறு இவற்றை பாலில் கலந்து பருகி வர, உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளும் தீர்ந்து விடும்.

வயிற்றுப் போக்கு :
குழந்தைகளுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் மாந்தம், கழிச்சல் மற்றும் வயிற்றுப் பொருமல் குணமாக, தும்பை இலைகளுடன் ஓமத்தை அல்லது ஓமவல்லி இலைகளை அரைத்து, குழந்தைகளுக்கு பருகத்தர, அவையாவும் விலகி, குழந்தைகள் விரைவில் நலமடையும்.
புண்ணிற்கு :
தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணையில் இட்டு காய்ச்சி, ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வர, அவை எல்லாம் விரைவில் ஆறி விடும்.

டான்ஸிலிடிஸ் :
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான டான்சிலிஸ் எனும் தொண்டைச் சதை பாதிப்பை தவிர்க்க தும்பை, அரு மருந்தாகிறது. தும்பை இலைகளை பயிற்றம் பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து, சாப்பாட்டில் முதலில் சாப்பிடும் பருப்பு போல மசித்து சாப்பிட்டுவர, தொண்டை சதை இன்னல்கள் விலகி, பாதிப்புகள் சரியாகும்.
தொண்டை பாதிப்பு நீங்க வேறொரு முறையாக, தும்பை இலைகளுடன் தும்பை மலர்கள், திப்பிலி பொடி மற்றும் அக்ரகாரம் எனும் மூலிகை இவற்றை தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி குறைந்து, உடல் நலமாகும்.

வாயுத் தொல்லை :
தும்பை இலைகளை தினமும் காலை வேளைகளில் சாறெடுத்து பருகி வர, உடலில் வாயுத் தொல்லை தீரும். தும்பைச் சாற்றை, நெற்றியின் முன் பக்கம் மற்றும் கழுத்தில் தடவி வர, தலைவலிகள் யாவும் விலகி விடும்

பூச்சிக் கடி :
உடலில் ஒவ்வாமை அல்லது பூச்சிகளினால் உண்டாகும் கட்டிகள், தோல் நமைச்சல் மற்றும் சிரங்குகள் குணமாக, தும்பை இலைகளை அரைத்து, தினமும் அவற்றின் மேல், தடவி வர வேண்டும். தூய்மையான தும்பைச் செடி, விஷத்தை முறிக்கக் கூடிய ஆற்றல் மிக்கதாகும்.
தேள் கொட்டிய வலி வேதனை குறைய, தும்பை இலைச் சாற்றினை சில துளிகள் தேனில் கலந்து பருகக் கொடுத்தபின்னர், தேள் கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றைக்கொண்டு நன்கு தேய்த்து வர, விஷம் முறிந்து வலிகள் குறைந்து விடும். இந்த முறையைப் பயன்படுத்தி, மற்ற விஷக் கடிகளுக்கும் தீர்வு காணலாம்.

மலச்சிக்கல் :
நேரம் தவறிய உணவு மற்றும் போதிய உறக்கமின்மை, மன உளைச்சல் பாதிப்புகள் இவற்றால் அடையும் உடல் நல பாதிப்பே, மலச்சிக்கல் ஆகும். மனிதரின் அன்றாட வாழ்வின் நிகழ்வை, பெருமளவு பாதிக்கும் மலச்சிக்கலை, முறையாக கவனித்து சரிசெய்து கொள்ளாவிட்டால், அது, உடல் அளவிலும், மன அளவிலும் மிகப் பெரிய இன்னல்களை, உருவாக்கி விடும்.
இந்த நிலையை தவிர்க்க, தும்பை இலைகளுடன் கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை சேர்த்து துவையல் போல செய்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல்கள் விலகி, உடல் இலகுவாகி, மனம் உற்சாகமடையும்.

கண்பார்வை :
கணினிகளில் நாள் முழுதும் அமர்ந்து பணியாற்றுவோர் அனைவரும் கண் வலி மற்றும் கண் பூத்துப்போவது எனும் பார்வைக் குறைபாட்டால் துன்பப்படுவர். அவர்களின் துயரம் போக்க, தும்பை இலைகள் மற்றும் மலர்களை அரைத்து பாலில் கலந்து சூடாக்கி பருகி வர, கண் பார்வைக் குறைபாடுகள் யாவும் நீங்கி விடும்.

மருத்துவ பலன்கள் தரும் தும்பை மலர்கள்
தலையில் நீர் கோர்த்து தலை பாரம், மூக்கடைப்பு மற்றும் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி பாதிப்புகளிலிருந்து மீள, தும்பைப் பூவை பாலில் கலந்து அரைத்து, நல்லெண்ணையில் காய்ச்சி, அந்த எண்ணையை, தலையில் நன்கு தேய்த்து, குளித்து வர, மேற்சொன்ன பாதிப்புகள் யாவும் நீங்கி, உடல் குணமடையும்.

உடல் சூட்டை தணிக்க, அவசியம் எண்ணைக் குளியல் எடுக்க வேண்டும், வாரமொரு முறையாவது எடுக்க வேண்டிய எண்ணைக் குளியலை நாம் முற்றிலும் புறக்கணித்ததன் விளைவாக, இன்று பல விதமான உடற் பிணிகளில் அல்லலுருகிறோம்.

நல்லெண்ணையில் தும்பை மலர்களை இட்டு காய்ச்சி, உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்த எண்ணையை நன்கு தேய்த்து, சற்றுநேரம் உடலில் ஊறிய பின்னர், குளித்து வர, கண்களின் பார்வைத் திறன் நன்கு தெளிவடையும். ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் விலகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

தும்பைப் பூச்சாறெடுத்து, அதில் சில துளிகள் சம அளவு தேனுடன் கலந்து தினமும் பருகி வர, உடலின் நற்சத்துக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத தாகம், நா வறட்சி மற்றும் உடல் அசதி யாவும் சரியாகி, உடல் நலம் பெறும்.
சிலருக்கு காதுகளில் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக, சீழ் வடிவதை தடுக்க, தும்பை மலர்களை பெருங்காயத் தூளுடன் சேர்த்து, எண்ணையில் காய்ச்சி, அதை காதுகளில் சில சொட்டுகள் தினமும் இட்டு வர, காது சீழ் வடிதல் பாதிப்புகள் யாவும் விரைவில் மறையும்.

இதுபோன்ற, எண்ணற்ற நற்பலன்களை, மனிதர்களுக்கு தரும் தும்பைச்செடிகளை, நகரங்களில் வசித்தாலும், வீடுகளில் தொட்டிகளில் இட்டு வளர்த்துவர, அவசர தேவைகளுக்கு, என்றும் துணையிருக்கும்

சங்குப்பூவின் மருத்துவ நன்மைகள்

Image result for சங்குப்பூ

எங்கும் காணப்படும் சங்குப்பூவின் மருத்துவ நன்மைகளை அறிவோம்
சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது. தட்டையான காய்களை உடையது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும்.
சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.
சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகம் உள்ளது.

தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.
நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.
யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.

ஆண்மையைப் பெருக்கும் அற்புத பூனைக்காலி!

Related image

Image result for பூனைக்காலி!
பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால் நமச்சல் ஏற்படும். இது விதை மூலம் இன விருத்திசெய்யப் படுகிறது.

மருத்துவக் குணங்கள்:
பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.

பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் காலை, மாலை இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்க்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக க்கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.

பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது.

நன்றி 


அறுவகைச் சுவை என்ன என்ன?


காரம் : 
Image result for milagai
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு.
கசப்பு :
Image result for pavarkai 
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தி கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பாகற்காய், சுண்டக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம்.
இனிப்பு :
Image result for sugar
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு.
புளிப்பு : 
Related image
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.
துவர்ப்பு : 
Related image
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்.
உப்பு :
Image result for salt
ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்.

-நன்றி 

மணத்தக்காளிக் கீரை 

இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. ஆம், இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதில்லை. நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.

வாய்ப்புண் ஆற :
இக்கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

வயிற்றுப்புண் ஆற : 
தீராத வயிற்றுப் புண் ஆற எவ்வளவோ மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் ஆறவில்லையா? மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகி வந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.
இவ்வையத்தின்போது உப்பு, புளி, காரத்தை முக்கால் பாகம் குறைக்க வேண்டும். மணத்தக்காளிக் காய்களை குழம்பு செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப்புண், குடற்புண் இவைகள் தீரும்.

காயின் குணங்கள் : உடல் வலி தீரும், களைப்பை அகற்றும், உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்றும், வாந்தியைப் போக்கும் இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

பழம் தரும் பயன்கள் : காது வலியைப் போக்கும், வயிற்றுப் பொருமலை தணிக்கும், காய்ச்சலைப் போக்கும், கருப்பைக்கு வலிமை தரும், பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.

-நன்றி 

அகத்தி கீரையின் மருத்துவம்

Image result for அகத்தி கீரை

அகத்தி கீரை = அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது.
* இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.
 * குழந்தை பெற்ற தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.
* கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.
* அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.
* இந்த அகத்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.
 * இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும்.
* வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.
* அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும்.
* வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.
* இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம்.
* இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. 

Aricanut leaf plates- பாக்கு மட்டையில் செய்த சாப்பாட்டு தட்டுகள்

Image may contain: sky, tree, plant, cloud, outdoor and nature No photo description available.  Image may contain: food Image may contain: food

இயற்கையிலிருந்து ஓர் உள்ளூர் உற்பத்தி. இயற்கையான புது உற்பத்தி. சமூக ஆர்வலர்கள், இயற்கையை நேசிப்பவர்களுக்கு, சூழல் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். " Aricanut leaf plates " " ககுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகள் " பாரம்பரிய முறைப்படி இயற்கையான தட்டுகளை நிகழ்வுகளில் பயன்படுத்துங்கள். இந்த கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகள் * இயற்கையானது. * உறுதியானது. * கையில் வைத்தும் சாப்பிட முடியும். * ஆரோக்கியமானது. * சூழலுக்கு பாதிப்பில்லை. * பாவித்தபின் மண்ணுக்கு பசளையாகும். * நிகழ்வுகளில் பயன்படுத்த உகந்தது. * பிளாஸ்ரிக் பொலித்தீன், இரசாயனம் கலந்த பேப்பர் தட்டுகளுக்கு மாற்றானது. நீங்கள் நிகழ்வுகளிற்கு கமுகு மடல் சாப்பாட்டு தட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் பசுமையான சூழலைப் பேண முடிவதுடன் உள்ளூர் உற்பத்தியையும் ஊக்குவித்து பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உதவுவீர்களாவீர்கள். பிளாஸ்ரிக், பொலித்தீன் ( Lunch tissue) கலந்த தட்டுகளில் சாப்பிடுதல் உடலுக்கு ஆபத்தானது என்பதுடன் சூழலிலும் உக்கா கழிவுகளாக தேங்குவதால் தரை, நீர் வாழ் உயிரினங்களும் இறக்க நேரிடுகிறது.இதற்கு மேலதிகமாக தற்போது பேப்பர் பிளேட்டுகள் போன்றவற்றை நிகழ்வுகளில் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ஒரு வகை ரெஜீபோம் கலந்துள்ளது. இவ்வாறான தட்டுகளும் மனிதனுக்கும், சூழலுக்கும் ஆபத்தானவையாகும்.

மெதுவான மெதுவடை 


மிருதுவான தயிர்வடை 

Image may contain: food

சுவையான பக்கோடா 

சாதம் அற்புத வடித்த கஞ்சியின் பயன்கள் 

No photo description available.

வேர்க்கடலை

வேர்க்கடலை 

Image may contain: food and text

நாட்டுக் கோழி கூட்டு

Related image

Related image

 தேவையான பொருள்கள் :

நாட்டுக் கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - அரை கப்
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
நாட்டுக் கோழி மசாலா - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:


எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - 3 கொத்து

நாட்டுக் கோழி மசாலா தயாரிக்க:

காய்ந்த மிளகாய் - 15
சோம்பு - 50 கிராம்
பட்டை - 10 கிராம்

செய்முறை :

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். நாட்டுக் கோழியில் எலும்பை நீக்கிவிட்டு, கொட்டைப் பாக்கு அளவிற்கு மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். நாட்டுக் கோழி மசாலா தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் சிறு துண்டுகளாக நறுக்கிய நாட்டுக் கோழியைச் சேர்த்து, மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்து சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். கோழி முக்கால் பதம் வெந்ததும் நாட்டுக் கோழி மசாலாவைச் சேர்த்துக் கிளறவும்.

தேங்காய்ப் பூவை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்தெடுத்து கோழியுடன் சேர்த்து நன்கு ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொன்னிறமாக தாளித்து, கோழியுடன் சேர்த்து கலந்துவிடவும்.

சுவையான நாட்டுக் கோழி கூட்டு தயார். வாழையிலையில் ரசத்துடன் பரிமாறச் சிறந்தது.



நன்றி 

ஸ்டஃப்டு மிர்சி சமோசா

Image result for சமோசா

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் (குடை மிளகாய்)- 4
எண்ணெய் - தேவைக்கு
ஸ்டஃப் செய்ய:
உருளை - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - சிறிது
உப்பு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி
எலுமிச்சை - பாதி

மேல் மாவுக்கு:

மைதா - அரை கப்
ரவை - அரை தேக்கரண்டி
சூடான எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு

செய்முறை :

உருளையை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

இதில் வேக வைத்த உருளை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து விடவும்.

மிளகாயின் ஒரு பக்கத்தில் மட்டும் கத்தியால் கோடு போட்டு உள்ளே இருக்கும் விதையை முடிந்தவரை நீக்கவும். பின் உருளை கலவையை வைத்து ஸ்டஃப் செய்யவும். மேலே எண்ணெய் ஆனால் டிஷூ பேப்பர் கொண்டு துடைத்து வைக்கவும்.

மேல் மாவுக்கு தேவையானவற்றை கலந்து பூரி மாவு பதத்தில் பிசையவும். இதை மெல்லியதாக திரட்டி ஒரு இன்ச் அளவு அகலம் உள்ள ரிப்பன்களாக வெட்டி வைக்கவும்.

மிளகாயின் காம்பு பகுதியில் கழுத்தை சுற்றி துண்டு போடுவது போல் மைதா மாவு ரிப்பனை சுற்றி நீர் தடவி ஒட்டவும். மிளகாய் மேல் எண்ணெய் இருந்தால் மைதா ஒட்டாது.

ஒரு சுற்றின் மேல் சிறிது ஓவர்லேப் ஆவது போல் அடுத்த சுற்று இருக்க வேண்டும். அப்படி ஓவர்லேப் ஆகும் இடத்தில் நீர் தடவி ஒட்டி கொண்டே சுற்றி வைக்கவும். மிளகாய் எங்கும் வெளியே தெரியாமல் சுற்றவும். ஒரு ரிப்பன் முடிந்தால் அடுத்த ரிப்பனை நீர் தடவி ஒட்டி தொடரவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்பைஸி ஸ்டஃப்டு மிர்சி சமோசா தயார். மிளகாய் காரமாக இருக்கும் என்பதால் உள்ளே வைக்கும் ஸ்டஃபிங் அதிக காரம் இல்லாமல் பார்த்து சேர்க்கவும். விரும்பினால் பீன்ஸ், கேரட், பட்டாணி எல்லாம் கலந்து செய்யலாம்.


  -நன்றி 


Sunday, 16 June 2019

வாழைக்காய் பொரியல் செய்யும் முறை


Image result for vazhaikai poriyal

Image result for vazhaikai poriyal


தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - ஒன்று
தனியா - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

வாழைக்காயை சதுரமாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வறுத்து பொடி செய்த கடலைப்பருப்பு பொடியைச் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி.


கொள்ளு ரசம்

Related image

கொழுப்பை குறைக்கறது மட்டுமல்லாம உடலுக்கு அதிகமான வலுவையும் கொடுக்கும், அதுனாலதான்ங்க எத்தினை தூரம், எவ்வளவ்வு நேரம் ஓடினாலும் குதிரை மட்டும் சடஞ்சுக்குவ்வே சடஞ்சுகாதுன்கலாமா
அப்போ நாமலும் கொள்ளு சாப்பிட்டம்னா .. நல்லா ஒடலாமுங்க,,அதாவது நல்லா வேலை செய்யலாம்னு சொல்ல வந்தனுங்க..:)
குழந்தைகளுக்கு சளி புடுச்சாவோ இல்ல இரும்பீட்டு இருந்தாவோ ,,
கொள்ளு ரசம் வெச்சு குடுங்க அப்புடியே கேட்க்கும்ங்க ,

கொள்ளு பருப்பு - 1/4 கப்
நாட்டு தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 1
பூண்டு - 3 பல்லு
கருவேப்பிலை - 6
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தியம் - 4
எண்ணெய் - 2 ஸ்பூன்

கொத்துமல்லி - ரெண்டு இனுக்கு
உப்பு , மஞ்சபொடி தேவையான அளவு
குக்கரில் 1/4 கப் கொள்ளு பருப்புக்கு 4 கப் தண்ணி ஊத்தி கொஞ்சோண்டு உப்பு , இத்துனூண்டு மஞ்ச பொடி, ஒரு துளி எண்ணெய் விட்டு குக்கரை அடுப்புல வெச்சு 8 விசில்வர வரைக்கும் விட்டு ஸ்டவ்வை ஆப் பன்னீருங்க...பருப்பு நல்லா வெந்து தன்னிலெ ஓரளவுக்கு கரஞ்சுருக்கும்,, இதுதான் பருப்பு தண்ணிங்க
இப்போ வடசட்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி ,, கடுகு ,
சீரகம் , மல்லி , நாலூ வெந்தியம் போட்டு தாளுச்சு விடுங்க ,,இதுல பூண்டை உருச்சு பருப்பா முட்டிய வெச்சு நல்லா தட்டி , கருவேப்பிலை. பச்சை மிளகாய்,வர மிளகா எல்லாம் சேர்த்து போட்டுருங்க ,,பருப்பு தண்ணியை இதுலெ ஊத்தி,, தக்காளிய நல்லா சிறுசு சிறுசா அருஞ்சு போட்டுருங்க,, உப்பு பத்துலீனா கொஞ்சம் போட்டுட்டு ... நல்லா ஒரு கொதி விடுங்க ,,,இப்போ கொத்துமல்லி தலைய சேர்த்து இறக்கி வெச்சுருங்க ,

Pepper mutton fry - பெப்பர் மட்டன் ரோஸ்ட்

பெப்பர் மட்டன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்: 

 மட்டன் - 1/2 கிலோ 
உப்பு - தேவையான அளவு 
 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 வெங்காயம் - 2 (நறுக்கியது) 
 பச்சை மிளகாய் - 2-3 
 கறிவேப்பிலை - சிறிது
 தக்காளி - 1 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
 கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
 கொத்தமல்லி - சிறிது
  மிளகு - 2 டீஸ்பூன் 
 சோம்பு - 2 டீஸ்பூன்
 செய்முறை:
 முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

Madhurai special Ayiraimin broth - மதுரை ஸ்பெஷல் அயிரைமீன் குழம்பு.

அயிரைமீன் குழம்பு.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 250 கிராம்
வெங்காயம் ‍ 250 கிராம்
தக்காளி – 2
பூண்டு- 10 பல்
மிளகாய் -3
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை – கொஞ்சம்
எண்ணெய்- ‍ 3 க‌ர‌ண்டி
கடுகு,உ.பருப்பு – அரைக்கரண்டி
வெந்தயம் – கால் க‌ர‌ண்டி
மிளகாய்த்தூள்‍ 1 தேக்க‌ர‌ண்டி

மல்லி  தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் ‍ 3 தேக்கரண்டி

செய்முறை

முதலில் பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும். அது துடிப்பு அடங்கியதும் நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி, உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போட வேண்டும், 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்க்க‌ வேண்டும். மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.