Saturday, 14 October 2017

Pirantai tuvaiyal - பிரண்டை துவையல்



பெண்களுக்கு கால்சியம் குறைபாட்டால் முதுகுவலி, கால்வலி , உடல்சோர்வு , பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது.

பிரண்டை

தேவையான பொருட்கள்

பிரண்டை                        - சிறிது

மிளகாய் வற்றல்           - எட்டு

 புளி                                   - கொட்டையளவு

தேங்காய்                         - சிறிது

கருவேப்பிலை               -சிறிது

பெருங்காயம்                  -ஒரு சிட்டிகை

உப்பு                                   -சிறிது

எண்ணெய்                      - மூன்று ஸ்பூன்



செய்முறை

பிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும்.

நன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.

பிரண்டை துவையல்
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில்  கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.

பிரண்டை துவையல் பயன்கள் 


  • உடைந்த எலும்புகளுக்கு பிரண்டை கொண்டு தயாரித்த எண்ணெய், சாறு பயன்படுகிறது.
  • வாரம் 2 முறை பிரண்டையை  பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை   முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.
  • எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக்       கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து  அதிக கொழுப்பைக் கரைக்கிறது.
  • நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை.
  • இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
  • இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல  கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.
  • புற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற மருந்துகளிலும் பிரண்டையின் பங்கு இருக்கிறது.
  • நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது ஆண்மையை பெருக்குகிறது . மலட்டு தன்மையை நீக்கி குழந்தையின்மையை குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் பிரண்டை   பயன்படுத்தப்படுகிறது.
  • தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.                                                                                                                                                                                                                                                                                                                                        - நன்றி 





1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete