Sunday, 22 October 2017

Broccoli Soup - ப்ரோக்கோலி சூப்

ப்ரோக்கோலி சூப்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - அரை ஸ்பூன்.

செய்முறை

1)-வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2)-சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

3)-வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

4)-வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ப்ரோக்கோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

5)-பிறகு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

6)-அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

7)-நன்றாக கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி.


-நன்றி 

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete