Sunday, 15 October 2017

The main features of quail rearing - காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

 காடை வளர்ப்பு  

காடை
  • மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.
  • குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
  • காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.
  • காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.
  • மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது.
  • காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% குறைந்த அளவு கொழுப்பும் 5 % இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
  • ஊட்ட சத்து நிறைந்த முட்டை.

    கூண்டு முறை வளர்ப்பில் காடைகள்
            வயது
கூண்டின் அளவு                   

காடைகளின் எண்ணிக்கை

    முதல் 2 வாரங்களுக்கு                  
3x2 1/2x1 1/2 அடி
100
    3 முதல் 6 வாரங்களுக்கு
4x2 1/2x1 1/2 அடி
50

  • கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும்.
  • கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.

  • காடை தீவனம் மிக சிறிய துகள்களாக இருப்பது மிகவும் அவசியம்.
  • ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.
  • ஆறு வார வயதிற்கு மேல் உள்ள காடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30-35 கிராம் தீவனத்தை அவற்றின் முட்டை உற்பத்திற்கு ஏற்ப அளிக்க வேண்டும்.
  • காடைகளின் தீவன மாற்று திறன் 12 முட்டை இடுவதற்கு 400 கிராம் தீவனம் உட்கொள்கிறது.
  • தீவனம் தயாரிக்க முடியாத போது, இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்கால தீவனத்தை 75 கிலோ வாங்கி அதனுடன் 5 கிலோ பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். தானியத்தின் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒருமுறை அரைத்து தூளின் அளவை குறைத்து உபயோக்கிலாம்.

  • 6 வார வயதில் பெண் காடைகள் 175-200 கிராம் எடையும் ஆண் காடை 125-150 கிராம் எடையும் இருக்கும்.
  • காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பிக்கும். மாலை நேரத்தில் காடைகள் முட்டையிடும்.காடைகள் 22 வது வயது வரை முட்டை இடுகின்றன.
  • காடை முட்டை எடை சுமார் 9 கிராம் இருக்கும்.

  • ஆண் காடைகளின் மார்பு குறுகலாகவும், பழுப்பு வெள்ளை நிறமும் கலந்து ஒரே சீராக இருக்கும். பெண் காடைகளின் மார்பு பகுதி விரிந்ததும் பழுப்பு நிறத்துடன் கறுப்பு சாம்பல் நிற புள்ளிகள் கழுத்து, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் காணப்படும். நான்கு 

  • வாரங்களுக்கு பிறகே ஆண், பெண் காடைகளை இனம் கண்டறிய முடியும்
  • முட்டைக்காக காடைகள் வளர்க்கும்போது 4 வது வாரத்திலேயே ஆண் காடைகளை பெட்டை காடைகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.
  • முட்டையிடும் காடைகளுக்கு 16 மணி நேரம் வெளிச்சம் அவசியம் இருக்க வேண்டும்.
காடைக்குஞ்சு பராமரிப்பு முறைகள்
 
காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச்சிறியவையாக 8-10 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இதனால் கோழிக்குஞ்சுகளை விடக் காடைக்குஞ்சுகளுக்கு அதிகம் வெப்பம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றின் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத்திணறி குஞ்சுகளில் இறப்பு அதிகம் காணப்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், கொட்டகையில் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத்தடை ஏற்படும் போதும் காடைக்குஞ்சுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கி இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

காடை இறைச்சி

 
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 70 முதல் 73% வரை இருக்கும். 140 கிராம் எடையுள்ள காடையிலிருந்து 100 கிராம் எடை இறைச்சி கிடைக்கிறது.


                                                                                                                 - நன்றி 





1 comment:

  1. விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete