Thursday, 19 October 2017

Bamboo rice - மூங்கில் அரிசி

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்




மூங்கிலரிசி இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். உடல் வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது. எல்லா வலிகளையும் தவிடுபொடியாக்கும் சக்தி இந்த மூங்கிலரிசியில் உள்ளது 

ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான்



40 வருடங்கள் ஆன மூங்கில் மரத்தின் பூவிலிருந்து கிடைப்பது மூங்கில் அரிசி. இதில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கிறது.

மூங்கிலரிசியின் நன்மைகள்
  •   இழந்த ஆரோக்கியத்தை மீட்டு, உடலுக்கு பலன் தரக்கூடியது. 
  •  மாதவிலக்குக் கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள் மற்றும் மூட்டு வலி, ருமாட்டிக் வலிகளைக் குறைக்கக்கூடியது. 
  • சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தத்தை, கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடியது.
  • கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது. குழந்தையின்மைப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • மூங்கில்  அரிசி மட்டுமல்ல, இதன் பட்டை மற்றும் குருத்து ஆகியவையும் உணவாகப் பயன்படுகின்றன. 
  • மூங்கில் குழாயையே பாத்திரமாக பயன்படுத்தி சமைப்பது பழங்குடி மக்களின் சிறப்பு. 

மூங்கிலரிசி இட்லி

 
தேவையானவை:

மூங்கில் அரிசி  3 கப்
இட்லி அரிசி  ஒரு கப்
உளுந்து  ஒரு கப்
வெந்தயம்  ஒரு டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு

செய்முறை: 

மூங்கில் அரிசி, இட்லி அரிசியை தனித்தனியாக தலா 4 மணி நேரமும் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 2 மணி நேரம் ஊற விடவும். கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயக் கலவையைச் சேர்த்து அரைத்தெடுத்து வைக்கவும். பிறகு மூங்கில் அரிசி மற்றும் இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இனி, அரைத்தவற்றை எல்லாம் நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, வழக்கமாக நாம் இட்லி அவிப்பது போல இட்லிப் பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.


                                                                                                                                -- நன்றி 



1 comment:

  1. விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete