Friday, 13 October 2017

தாம்பத்திய உறவில் நீடித்த இன்பம் பெற - பாகம் - 1



அமுக்கிராகிழங்கு

அமுக்கிராகிழங்கு
 இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். வயாக்ரா உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்களே சொல்கிறார்கள் இது உடல் நலத்தை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது என்கிறார்கள்..
இன்றைய வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு உடலை பால்படுத்தி கொள்வதாக நம்பி வீணைபோகிறார்கள்.

அமுக்கிராகிழங்கு செடி
தமிழ் மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்த சில பாரம்பரிய ரகசிய மருத்துவமுறை மூலம் தாம்பத்ய உறவுக்கு  வலு சேர்க்கும் முறையை எந்தவித பக்க விளைவும் இல்லாமல் நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவு பொருட்களைவைத்தே நெறிப்படுத்தி இயற்கை முறையில் உணர்ச்சியை அதிகரிக்க சில வழிமுறைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

அமுக்கிரா எனும் இயற்கை வயாகரா 

அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அனால் இயற்கையான எந்த பக்கவிளைவும் இல்லாதது என்கிறார்கள்.



அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்

அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி பெரும் , உடல்  அழகு பெரும் , நீண்ட ஆயுள் பெறலாம்.

 அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம் .




கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் (½ – 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும். உடல் புத்துணர்ச்சி பெரும்.



அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது சித்தர்கள் வாக்கு.




                                                                                                          - நன்றி




1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete