Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 October 2017

Manalikkirai - மணலிக்கீரையின் மகத்துவம்

மணலிக்கீரை:

    மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக:

    மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:

    ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

    மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

    மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம்பெற:

    மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.

Natural carrot skin cream - மேனி பளபளப்பாக‌


தேவையான பொருள்கள்:

    கேரட்.
    பால்.

செய்முறை:

    கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

Sunday, 22 October 2017

Spinach ponnankanni broth-பொன்னாங்கண்ணி- காராமணி குழம்பு

பொன்னாங்கண்ணி- காராமணி குழம்பு
தேவையானவை
 உருவிய பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கப்,
 சிவப்பு காராமணி, துவரம்பருப்பு – தலா அரை கப்,
 தக்காளி- 2 ,
 புளி – நெல்லிக்காய் அளவு,
 சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
 மஞ்சள்,உப்பு,பெருங்காயம் – தேவையான அளவு,
 கடுகு – அரை டீஸ்பூன்,
 வெந்தயம் – சிறிதளவு,
 எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை
பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாகக் கழுவவும். சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைக்கவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைக்கவும். இதனுடன் தக்காளியை வதக்கி, சாம்பார் பொடி, உப்பு, மற்றும் ஊற வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க விடவும். கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். இறுதியாக, துவரம் பருப்பை வேக வைத்து குழம்பில் சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

-நன்றி 

Mango currant Broth - மாங்காய் வத்தல் குழம்பு

மாங்காய் வத்தல் குழம்பு
தேவையானவை
மாங்காய் வத்தல் – 10 துண்டுகள்,
தக்காளி-1 ,
காய்ந்த மிளகாய் – 4,
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு சிறிதளவு,
 மஞ்சள்,உப்பு – தேவையான அளவு,
 எண்ணெய் – 2 டீ ஸ்பூன்,
 கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு

செய்முறை
 மாங்காய் வத்தலை சிறிதளவு தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் துவரம்பருப்பை எண்ணெய் விட்டு வறுக்கவும். இத்துடன் ஊற வைத்த மாங்காய் வத்தலையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் தக்காளியை வதக்கி, இந்தக் கலவையை சேர்த்து, அத்துடன் உப்பு , மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், எண்ணெயில், கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்குமுன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி மேலும் ஒரு கொத்தி வந்ததும் பரிமாறவும் .
புளி சேர்க்காமல் செய்யப்படும் குழம்பு இது. மாங்காய் சீஸனின்போது அதிகமாக வத்தல் போட்டு வைத்துக் கொண்டால் இப்படி சுலபமாய் செய்து அசத்தலாம்.

-நன்றி 

Alakak broth - தாளகக் குழம்பு

தாளகக் குழம்பு
தேவையானவை:
 கொத்தவரங்காய், பீன்ஸ் – தலா 10,
 சிவப்பு பரங்கிக்காய் – ஒரு துண்டு,
கேரட், சௌசௌ – 1,
 வாழைக்காய் – ஒரு சிறிய துண்டு,
 தக்காளி-2 ,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
 எள், கடலைப்பருப்பு, அரிசி, உளுத்தம்பருப்பு, தனியா, எண்ணெய், சாம்பார் பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – அரை கப்,
கடுகு , சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை
வெறும் கடாயில் எள்ளைப் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும், அரிசி மற்றும் உளுத்தம்பருப்பையும் தனித் தனியே வறுக்கவும். அரிசி, தேங்காய் துருவல் நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை வதக்கி, காய்கறிகளைப் பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். இதில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்த பொடியைப் போடவும். பின்னர், எள்ளுப்பொடி சேர்த்து, குழம்பு கொதித்ததும், அரிசி மற்றும் உளுந்தை அரைத்து இதனுடன் சேர்க்கவும். தேங்காய் துருவலை வறுத்துப் போட்டு, பெருங்காயம், கடுகு , சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

-நன்றி 

Peanut sauce - வேர்க்கடலை குழம்பு

வேர்க்கடலை குழம்பு
தேவையானவை
 பச்சை வேர்க்கடலை – ஒரு கப்,
பெரிய தக்காளி-1 ,
புளி – இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவு,
 காய்ந்த மிளகாய்,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
 கடுகு ,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
 உப்பு – தேவையான அளவு.

செய்முறை
வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊற வைத்து வேக விடவும். வாணலியில் தக்காளியை சிறிது எண்ணெயில் வதக்கி, ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, வேக வைத்த கடலையையும் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, குழம்பில் கொட்டி இறக்கவும்

-நன்றி 

Bean curry spices - மொச்சை மசாலா குழம்பு

மொச்சை மசாலா குழம்பு
தேவையானவை
 மொச்சைப்பருப்பு – ஒரு கப்,
 கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
 உப்பு – தேவையான அளவு,
 புளி – நெல்லிக்காய் அளவு,
 துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்,
 கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை , கொத்து மல்லி -தேவையான அளவு.

செய்முறை
 புளிக் கரைசலுடன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை விடவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கே.வேப்பிலை, கொ.மல்லி தூவி பரிமாறவும்.

-நன்றி 

Pattiyak broth - பத்தியக் குழம்பு

பத்தியக் குழம்பு
தேவையானவை
 புளி – 2 எலுமிச்சை அளவு,
சுண்டைக்காய் வத்தல் – 10,
 காய்ந்த மிளகாய் – 1,
 சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்,
 கடுகு, சீரகம்,வெந்தயம், துவரம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
 எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
 பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் , துவரம் பருப்பு தாளித்து, சுண்டைக்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இத்துடன் உப்பு சேர்த்து, குழம்பு கொதித்ததும் இறக்கவும்.
காய்ச்சலாய் வந்த வாய்க் கசப்பு, வயிற்றுப் பிரச்னைக்கும் இது நல்லது

-நன்றி .

Multi Spinach curry - கூட்டு கீரை குழம்பு

கூட்டு  கீரை குழம்பு
தேவையானவை
 பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை,
 முள்ளங்கிக்கீரை,
 மணத்தக்காளிக்கீரை,
முருங்கைக்கீரை,
வேக வைத்த துவரம் பருப்பு – தலா ஒரு கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
 ஞ்சள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு,
 எண்ணெய், வெந்தயம், கடுகு, சீரகம், பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:
கீரைகளை பொடியாக நறுக்கி, கழுவி, நெய் விட்டு வதக்கவும். புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து , அதில் மஞ்சள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய கீரைகளை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்க்கவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயத்தை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
துவரம்பருப்பிற்கு பதில் பாசி பருப்பையும் உபயோகப் படுத்தலாம்.

-நன்றி 

Vataka broth - வடக குழம்பு

வடக குழம்பு
தேவையானவை
 கூட்டு வடகம் – 100 கிராம்,
புளித் தண்ணீர் – அரை லிட்டர்,
 சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு , பெருங்காயம் , மஞ்சள் – தலா ஒரு டீஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் – 1,
 உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
 கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு.

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியை போட்டு லேசாக வறுத்து, கூட்டு வடகத்தை அப்படியே சேர்க்கவும். வடகம் நன்கு வறுபட்டதும், புளித் தண்ணீரை விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதில், வேக வைத்த கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை சேர்த்தும் செய்யலாம்

-நன்றி 

Bitter gourd curry - பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு
தேவையானவை
 மிதி பாகற்காய் – ஒரு கைப்பிடி (அ) பெரிய பாகற்காய் – 1,
தேங்காய் துருவல் – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 2,
 மஞ்சள், உளுத்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா – தலா ஒரு டீஸ்பூன்,
 புளித் தண்ணீர் – ஒரு கப்,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – ஒரு கப்,
 கடலை பருப்பு -1/2 கப் ,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ,எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்.

செய்முறை:
கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உ.பருப்பை தனியாக எண்ணெய் விட்டு மஞ்சளுடன் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். இதில் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏற்கெனவே கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் ,கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

-நன்றி 

Watta manattakkali broth - மணத்தக்காளி வத்த குழம்பு

மணத்தக்காளி வத்த குழம்பு
தேவையானவை
 மணத்தக்காளி வத்தல் – ஒரு கப்,
 சிறிய உளுந்து அப்பளம் – 2,
 கடுகு – அரை டீஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் – 1,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
 கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன் தேவைகேற்ப ,
 புளி – நெல்லிக்காய் அளவு
 சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள், உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – ஒரு கப் அல்லது தேவையான அளவு .

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும். இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து புரட்டவும். இதில் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்த மல்லி வதக்கியோ, பச்சையாகவோ (அவரவர் விருப்பப் படி) சேர்க்கவும்.
இறுதியில், அப்பளத்தை சிறு துண்டுகளாக வறுத்து குழம்பு கொத்தித்ததும் அதில் போட்டு கலக்கவும். அப்பளத்தை வத்தலோடு வறுத்தும் செய்யலாம். ஆனால் அதை விட , இறுதியில் சேர்ப்பது நன்றாக இருக்கும்.
வாய்ப் புண், வயிற்றுப் புண் இருந்தால் இந்த மணத்தக்காளி குழம்பு அவற்றை குணப்படுத்தும் என்பது கிராமத்தாரின் நம்பிக்கை.

-நன்றி 

Murunkaikkirai fried gravy - முருங்கைக்கீரை பொரித்த குழம்பு

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு
தேவையானவை
 ஆய்ந்த முருங்கைக்கீரை – இரண்டு கைப்பிடி அளவு,
பாசிப்பருப்பு – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 1,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
 தேங்காய் துருவல் – அரை கப்,
உளுத்தம்பருப்பு,
 மிளகு – தலா கால் டீஸ்பூன்,
 எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
மஞ்சள், உப்பு ,
பெருங்காயம் , கறிவேப்பிலை, கொத்த மல்லி – தேவையான அளவு.

செய்முறை:
 முருங்கைக்கீரையை சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்தவற்றுடன் வேக வைத்த கீரையையும் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த பாசிப்பருப்பு , மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியில் கடுகு , பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

-நன்றி 

Chopped pellet karakkulampu - பருப்பு உருண்டை காரக்குழம்பு

பருப்பு உருண்டை காரக்குழம்பு
தேவையானவை
 துவரம்பருப்பு – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
 புளி – ஒரு எலுமிச்சை அளவு,
தக்காளி-2 ,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
மஞ்சள் ,உப்பு – தேவையான அளவு,
கடுகு,
வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
 எண்ணெய் – 2 டீஸ்பூன்,
 சோம்பு(1 ஸ்பூன் ) ,
இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ),
 பச்சை மிளகாய் (3 ) ,
 தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) ,
உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:
 துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையை போட்டுக் கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்.

-நன்றி 

Rava dosa - ரவா தோசை


ரவா தோசை
தேவையான பொருட்கள்
மாவு கரைக்க:
ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கப்

ருசிக்கு:
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
முழு குருமிளகு - 10
மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
தோசை சுடுவதற்கு நெய்/எண்ணெய் - கால் கப்

செய்முறை
1.மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரைத்து வைக்கவும். ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.

2.கரைத்த மாவுடன் சீரகத்தை கலந்து வைக்கவும். பிறகு அரை ஸ்பூன் நெய்/எண்ணெய் காயவைத்து அதில் முந்திரி, குருமிளகு சேர்த்து முந்திரி நிறம் மாறியதும் தீயை அணைத்து விட்டு கரைத்த மாவில் கொட்டி கிளறவும்.

3.வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை கலந்து வைக்கவும். தோசை தவாவை காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை சுற்றி ஊற்ற அது தானாகவே பரவிக் கொள்ளும்.

4.உடனே மேலே 3 தேக்கரண்டி வெங்காயம், மிளகாய், இஞ்சி தூவி நெய் தெளித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி மறுபுறமும் நன்கு மொறுகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். இதற்கு தேங்காய் சட்னி ரொம்பவும் அருமையாக இருக்கும்.



-நன்றி

Paneer Roll Goes - கோஸ் பன்னீர் ரோல்

கோஸ் பன்னீர் ரோல்
தேவையானவை

துருவிய கோஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்தது
பன்னீர் துருவியது – அரை கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.


-நன்றி 

Radish 'Parathas - முள்ளங்கி பராத்தா

முள்ளங்கி பராத்தா
தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப்
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - கால் கப்
முள்ளங்கி - 2 (தோல் சீவி, துருவவும்)
பச்சை மிளகாய் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை 

 முள்ளங்கி துருவலை நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். முள்ளங்கி சக்கையையும் தனியாக எடுத்து வைக்கவும். கோதுமை மாவுடன் சோள மாவு, உப்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, முள்ளங்கி சக்கை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் முள்ளங்கி சாறு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மாவை நன்றாகப் பிசையவும். பிறகு, இந்த மாவை அதிக நேரம் ஊறவைக்காமல் உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, தேய்த்த பராத்தாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

-நன்றி 

Tepla metti - மேத்தி தேப்லா

மேத்தி தேப்லா
தேவையானவை

கோதுமை மாவு – ஒரு கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
ஆய்ந்த வெந்தயக்கீரை (மேத்தி) - அரை கப் (கழுவி, பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தயிர், ஒரு டீஸ்பூன் எண்ணெய், வெந்தயக்கீரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீரைவிட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டைகளாக உருட்டி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, தேய்த்த பராத்தாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். 


-நன்றி 

Kobe 'Parathas - கோபி பராத்தா

கோபி பராத்தா
தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப்
காலிஃப்ளவர் (கோபி)
துருவல் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோதுமை மாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும். துருவிய காலிஃப்ளவருடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே ஸ்டஃபிங் ஆகும். பிறகு, மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர் ஸ்டஃபிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும். பின்னர் சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, தேய்த்த பராத்தாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


-நன்றி 

Spring onion Parathas - வெங்காயத்தாள் பராத்தா



Spring onion parotta
தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப்
கம்பு மாவு - கால் கப்
வெங்காயத்தாள் - 2
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோதுமை மாவுடன் கம்பு மாவு, தயிர், உப்பு, வெங்காயத்தாள், பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டைகளாக உருட்டி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி தேய்த்த பராத்தாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


-நன்றி 

Mint and ginger soup - புதினா இஞ்சி சூப்

புதினா இஞ்சி சூப்
சளி, இருமல், வயிற்று வலி உள்ளவர்கள் இந்த புதினா இஞ்சி சூப்பை குடிக்கலாம்.
இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புதினா - ஒரு கட்டு,
கேரட் - ஒன்று,
பீட்ரூட் - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
தக்காளி - ஒன்று,
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்,
கார்ன் ஃப்ளவர் - 2 டீஸ்பூன்,
பால் - அரை கப்,
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கார்ன் ஃப்ளவரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

புதினாவுடன் கேரட், பீட்ரூட், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் வடிகட்டிய சாறு, பால், கார்ன் ஃப்ளவர் கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மேலே உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பருகலாம்.

சூப்பரான புதினா இஞ்சி சூப் ரெடி.


-நன்றி 

Yam dumplings Vada - கருணைக்கிழங்கு வடை

 கருணைக்கிழங்கு வடை
கருணைக்கிழங்கில் கூட்டு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க.
கருணைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 
பொட்டுக்கடலை - 150 கிராம்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
பட்டை, சோம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை
1)-கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
2)-ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3)-பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
4)-இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
5)-வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான பொட்டுக்கடலை - கருணைக்கிழங்கு வடை ரெடி. தக்காளி சாஸுடன் சாப்பிடலாம்.

-நன்றி 

Canna masala gravy சன்னாமசாலா

சன்னாமசாலா

தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
வேகவைத்த கொண்டைக்கடலை - 10
முந்திரி - 3
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2

செய்முறை 
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீருடன் எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
டேஸ்டி & ஈசி கடலை குருமா தயார். சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றிற்கு ஏற்ற ஜோடி.

-நன்றி 

Broccoli Soup - ப்ரோக்கோலி சூப்

ப்ரோக்கோலி சூப்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - அரை ஸ்பூன்.

செய்முறை

1)-வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2)-சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

3)-வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

4)-வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ப்ரோக்கோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

5)-பிறகு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

6)-அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

7)-நன்றாக கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி.


-நன்றி 

Cauliflower Pepper Roast - காலிஃபிளவர் மிளகு வறுவல்

Cauliflower  Pepper Roast
தேவையானவை 
காலிஃபிளவர்- 1
பெரிய வெங்காயம்-ஒன்று
பூண்டு- ஒரு டீஸ்ஸ்பூன்
தக்காளி- ஒன்று
பச்சைமிளகாய்- இரண்டு
மிளகு - இரண்டு டீஸ்ஸ்பூன்
மன்ஜ்சத்துள்- அரை டீஸ்ஸ்பூன்
உப்பு- ஒரு டீஸ்ஸ்பூன்
இஞ்சி - ஒரு டீஸ்ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை 
1.வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிவைக்கவும்.தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.மிளகை பொடித்து கொள்ளவும்
2.கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு அவை பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு சிவக்க வதக்கவும்.பிறகு இஞ்சி, பூண்டு, மற்றும் மஞ்சத்தூளைப் போட்டு தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
3.காலிஃபிளவர் துண்டுகளுடன் உப்பை போட்டு நன்கு கிளறி, ஒரு கையளவு நீரை தெளித்து மூடிபோட்டு வேகவிடவும்.காய் பாதி வேக்காடானதும் பொடித்து வைத்துள்ள மிளகு பொடியைத் தூவி நன்கு கிளறி காய் முழுவதும் வெந்தவுடன் இறக்கி விடவும்

-நன்றி 

Promulikai Soup - மூலிகை சூப்


பசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
மிளகு – 20 கிராம்,
சீரகம் – 20 கிராம்,
கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம்,
ஓமம் – 20 கிராம்,
துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி,
உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி,
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை 
* அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியது இறக்கி பருகவும்.
* சூப்பரான மூலிகை சூப் தயார்.
* இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும். அஜீரண பிரச்சனை தீரும்.
* இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

-நன்றி 

Veppampoo soup - வேப்பம்பூ சூப்.

வேப்பம்பூ சூப்.

பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த வேப்பம் பூ. இந்த சூப்பை குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழியும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 
வேப்பம் பூ - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்,
உப்பு , மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை 
வேப்பம் பூவை சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு உருக்கியதும் வேப்பம் பூ சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு இறக்கி வடிகட்டவும்.
இதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பருகலாம்.
துளி கூட கசப்பே தெரியாது. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். மாதம் ஒரு முறை சாப்பிட்டால் கூட போதுமானது.

-நன்றி 

Idli Greengram - பாசிப்பயிறு இட்லி

பாசிப்பயிறு இட்லி
பாசிப்பயிறில் பல சத்துக்கள் உள்ளன. சத்தான பாசிப்பயிறு இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 1 கப்
இட்லி அரிசி – 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 மேசைக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1) பாசிப்பயிறு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2) நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

3) அரைத்த மாவை உப்பு போட்டு கரைத்து 2 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

4) பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

5) இந்த இட்லிக்கு தொட்டு கொள்ள மிளகாய் சட்னி சுவையாக இருக்கும்.

சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி ரெடி


-நன்றி 

dried ginger , coriander coffee சுக்கு, மல்லி காபி


சுக்கு, மல்லி காபி
சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.

தேவையான பொருட்கள்

சுக்கு காபி பொடி அரைக்க :
சுக்கு - 1/2 கப்
மல்லி - 1/4 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை 

முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!


-நன்றி 

Ginger broth - இஞ்சி குழம்பு

இஞ்சி குழம்பு
இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவுகளுடன் பரிமாறலாம். வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்
* இஞ்சி - 50 கிராம்
* பூண்டு - 50 கிராம்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 2
* புளி - சிறிதளவு
* மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
* மிளகு - 1 தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
* நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
* நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
* இப்பொழுது தோல் சீவி அரைத்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
* புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
* மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி உணவுடன் பரிமாறலாம்.

-நன்றி 

nipet - எள்ளடை (அ) தட்டை

எள்ளடை (அ) தட்டை
தேவையானப் பொருள்கள்
புழுங்கல் அரிசி - 2 கப்புகள்
பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (ஊற வைக்கவும்)
காய்ந்த மிளகாய் - 6 (காரத்திற்கேற்ப)
பூண்டு - 2 பற்கள்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 

செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போதே அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.
மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் நைசாக அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பருத்தி துணியை வைத்து வட்டமாகத் தட்டவும். மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும். அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும். இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடை அல்லது தட்டை தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம். எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக, மொறுமொறுப்பாக இருக்கும்.


-நன்றி 

Pineapple halwa - அன்னாசி அல்வா


அன்னாசி அல்வா
தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த அன்னாசி - பாதி
சர்க்கரை - ஒன்றரை கிலோ
மைதா - 300 கிராம்
நெய் - 300 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
மஞ்சள் - சிறிதளவு.

செய்முறை

1) அன்னாசியை தோல் சீவி 1 சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்ததை இன்னும் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

2) மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.

3) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய்யையும் வண்ணப்பொடியையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.

4) எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்டி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.

அன்னாசி அல்வா ரெடி!


-நன்றி 

vermicelli Kesari - சேமியா கேசரி

கோவை ஸ்பெஷல் சேமியா கேசரி
தேவையான பொருட்கள்
வருத்த சேமியா – 1 கப் (100 கிராம்)
சர்க்கரை – ½ கப் (50 கிராம்)
ஏலக்காய் – 2, கிஸ்மிஸ் – 5 Piece
கேசரி பவுடர் – தேவையான அளவு
நெய் – 1/4 கப்
முந்திரி பருப்பு – 10 Piece


செய்முறை
1.முந்திரியை சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
2.ஏலக்காய்யை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
3.சேமியாவை சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
4.பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் (200 கிராம) தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு கப் ரவைக்கு அதற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும்.
5.அதில் கேசரி பவுடர் கலருக்கு தேவையான அளவு போடவும்.
6.தண்ணீர் கொதித்த பிறகு அதில் சேமியாவை போட்டு கிண்டவும்.
7.அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
8.சேமியா நன்றாக வெந்தவுடன் அதனுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிண்டவும்.
9.ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுத்து, கேசரிவுடன் சேர்த்துக் கிண்டவும்.
10.பத்து நிமிடத்தில் சேமியா கேசரி தயாராகி விடும்.

-நன்றி 

Green peas Kachori - பச்சை பட்டாணி கச்சோரி

பட்டாணி கச்சோரி
தேவையான பொருட்கள் 
மைதா - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


பச்சை பட்டாணி - 2 1/2 கப்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
ஓமம் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை 
1-பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
2-ஒரு பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
3-ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஓமம், பெருங்காய தூள் சேர்த்து தாளித்த பின் மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
4-பின்பு சர்க்கரை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, மசித்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து நன்கு கிளறி, இறக்கி தனியாக வைக்க வேண்டும்.
5-பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே பட்டாணி கலவையை வைத்து மடித்து, தனியாக தட்டில் வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
6-ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கச்சோரிகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி கச்சோரி ரெடி!!!
இதனை விருப்பான சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

-நன்றி

Badshah - பாதுஷா !!

பாதுஷா
தேவையானவை
மைதா - 200 கிராம்,
 சர்க்கரை - 300 கிராம்,
 உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை,
 எண்ணெய் - கால் கிலோ,
நெய் - ஒன்றரை டீஸ்பூன்,
 பால் - ஒரு டீஸ்பூன்,
 கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு,
 ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை
 உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

-நன்றி 

Urad Laddu உளுந்து லட்டு




உளுந்து லட்டு 

தேவையானவை:
முழு உளுந்து - 200 கிராம், சுக்குப்பொடி - அரை டீஸ் பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க் கரை - 150 கிராம், நெய் (அ) வனஸ்பதி - தேவைக்கேற்ப, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை:
முழு உளுந்தை வறுத்து, மாவாக்கவும். அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். நெய் (அ) வனஸ்பதியை உருக்கி, உளுந்து மாவுக் கலவை மீது ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
இந்த ஸ்வீட் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும்.



-நன்றி 

Citron Pickle - நார்த்தங்காய் ஊறுகாய்

நார்த்தங்காய் ஊறுகாய்
நார்த்தங்காயை  உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும். பசியைத்தூன்டும்.
வாயுக்கோளாறை நீக்கும்.

 
தேவையானவை
நார்த்தங்காய் - 25 (பெரியது)
கல் உப்பு - 25 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை
1.முதலில் நார்த்தங்காயைக் நான்கு கழுவி சுருளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி கலந்து சுருளில் தூவி மறுபடியும் முழு நார்த்தங்காய் போல் சுருளைச் சுற்றி ஜாடியில் வைத்து மூடி வைக்கவும்,
அடுத்த நாளில் இருந்து தினம் குலுக்கி ஊறியதும் வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து, அதிகம் ஈரம் இல்லாமல் காய்ந்ததும் பதமாக எடுத்து வைத்துக் கொண்டால் அதிக நாட்கள் கெடாது.

நார்த்தங்காய் சாதம்
தேவையானவை
நார்த்தங்காய் - 1,
சாதம் - 2 கப்,
பச்சைமிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிது,
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

செய்முறை 
 நார்த்தங்காயை, எலுமிச்சைப்பழம் ஜூஸ் போல் பிழிந்து எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, வேர்க்கடலையை வறுக்கவும். பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் நார்த்தங்காய் ஜூஸ் ஊற்றி இறக்கி கறிவேப்பிலை போட்டு சாதம் கிளறி பரிமாறவும்.

-நன்றி 

Conpapti - சோன் பப்டி

சோன் பப்டி
தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 1/2 கப் 

மைதா – 1 1/2 கப்
 பால் – 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை – 2 1/2 கப்
 ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
 தண்ணீர் – 1 1/2 கப்
 பாலிதீன் ஷீட் – 1
 நெய் – 250 கிராம்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும். பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும். பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி...


-நன்றி 

Coconut laddu - தேங்காய் லட்டு

தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்
 துருவிய உலர்ந்த தேங்காய் - 3 கப் 
 சர்க்கரை - 2 கப் பால் - 1 கப் 

செய்முறை 
  முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிர வைத்தால், சூப்பரான தேங்காய் லட்டு ரெடி!!!

-நன்றி 

carrot Halwa - காரட் அல்வா

காரட் அல்வா

தேவையான பொருட்கள்
காரட் - 3
பால் - ½ லிட்டர்
நெய் - 120 மிலி
முந்திரி பருப்பு - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 4
ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
காரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்
கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்
பாதாம் சேர்க்கவும்
பொன்னிறமாகும் வரை வதக்கவும்
அதனை எடுத்து தனியே வைக்கவும்
பின்பு காரட் சேர்க்கவும்
சிறிது நேரம் வதக்கவும்
அதில் பாலை விடவும்
அதனை கொதிக்க வைக்கவும்
பின்பு அதனை மூடி வைத்து சிம்மில் வைக்கவும்
காரட் வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்
பின்பு ஏலக்காய் சேர்க்கவும்
பின்பு ஆரஞ்சு கலர் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
கெட்டியாகும் வரை வேக வைக்கவும்
பின்பு சிறிது நெய் சேர்க்கவும்
பொரித்த பாதாம் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
காரட் அல்வா ரெடி

-நன்றி 

Rava laddu - ரவா லாடு

ரவா லாடு
தேவையானவை
வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ,
 பொடித்த சர்க்கரை - கால் கிலோ,
 நெய் - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள்,
வறுத்த முந்திரி,
திராட்சை - சிறிதளவு.

செய்முறை:
நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள்
 பிடிக்கவும்.

-நன்றி 

Panivaraku mushroom rice - பனிவரகு காளான் சாதம்


தேவையானவை
1. பனிவரகு - 1 கப்
2. நறுக்கிய காளான் - 1/2 கப்
3. கடலை எண்ணெய் – 3 மேசை கரண்டி
4. ஏலக்காய் - 2
5. பட்டை – சிறிது
6. கிராம்பு - 2
7. ஜாதிக்காய், ஜாதிபத்திரி - சிறிது
8. பட்டை, சோம்பு(பொடித்தது) - 2 தேக்கரண்டி
9. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் - சிறிது
12. வெங்காயம் - 1/4 கப்
13. தக்காளி - 1/4 கப்
14. புதினா - 1 கைப்பிடி
15. தேங்காய்பால் - 1/4 கப்

செய்முறை
1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதை சூடாக்கி பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, பட்டை சோம்புப் பொடி, இஞ்சி பூண்டு விழுது முறையே சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. மேலும் அதனுடன் புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
3. இதனுடன் கழுவிய காளான், கழுவிக் கல்லரித்த பனிவரகு அரிசி,
2 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
4. தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது தேங்காய் பால்
சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து பிறகு பரிமாறவும்.

-நன்றி 

Paalak paneer - பாலக் பன்னீர்


பாலக் பன்னீர்
தேவையான பொருட்கள்
பன்னீர் - 250 கிராம்
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
 நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
 வெங்காயம் - 2 (நறுக்கியது)
 தக்காளி - 2 (நறுக்கியது)
 பசலைக் கீரை - 2 கட்டு
 வெந்தயக் கீரை - 1/2 கப்
 பச்சை மிளகாய் - 4-5
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
 மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்
 பிரஷ் க்ரீம் - 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!!!

-நன்றி 

Wheat halwa - கோதுமை அல்வா

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1/4 கப்
 சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1/4 கப்  2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
 பாதாம் - 4 (நறுக்கியது) 

செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!

-நன்றி 

Mushroom gravy - காளான் குருமா


MushroomGravy
தேவையானவை
காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 3
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

செய்முறை
1.சுத்தம் செய்த காளானை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து பெரிய
துண்டுகளாக வெட்டவும்.தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றையும்
தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து,
பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
மேலும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
3.மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர்,
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இதனுடன்
தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து
மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.இறுதியாக சிறிது
நேரம் அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு,கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

-நன்றி 

Rava bread - ரவை அப்பம்

ரவை அப்பம்

தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
ரவை - ¾ கப்
வெல்லம் - ½ கப்
ஏலக்காய் பொடி - ஒரு துளி (வாசனைக்கு)
முந்திரி, பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டீ ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
எண்ணை பொரித்து எடுக்க


செய்முறை
மைதாவை உப்பு(சிறிது அளவு-pinch) சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதன் மேல் சிறிது எண்ணை தடவி ஈரத்துணியால் மூடி 30 நிமிடங்கள் வைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து நெய் ஊற்றி ரவையை வாசனை வரும் வரையில் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு தனியாக வைக்கவும்.
கடாயில் வெல்லம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடற்றவும். பிறகு அதை வடிக்கட்டவும்.
பிறகு வெல்ல கலவையை நன்றாக சூடேற்றி, வறுத்த ரவையை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறவும். ரவையை நன்றாக மூடி வெந்த பின் மீதியுள்ள நெய் மற்றும் முந்திரி, பாதாம் சேர்க்கவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
ரவை கலவை நன்றாக ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
மைதா மாவிலிருந்து சிறிய எலுமிச்சை அளவு, எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில், எண்ணை தடவிய கை விரல்களால் வட்டமாக தட்டி, ரவை உருண்டயை வைத்து நன்றாக மூடி, போளியைப்போல தட்டி வைத்துக்கொள்ளவும் . இதோ போல எல்லா ரவை உருண்டைகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணை சூடானதும் தட்டி வைத்த போளிகளை மிதமான சூட்டில் பொன்னிறமாக இருபக்கமும் பொறித்து எடுக்கவும் .
சுவையான சொஜ்ஜி(சூஜி) அப்பம் ரெடி.

-நன்றி