Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tamilar Food Street

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 15 July 2019

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும்


பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1.துளசி :துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2.தூதுவளை :தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3.சோற்றுக்கற்றாழை :இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.ஷ...ரு🐝🐝

4.மஞ்சள்_கரிசாலாங்கண்ணிஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5.பொன்னாங்கண்ணி :வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. ‘பொன் ஆகும் காண் நீ’ என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6.நேத்திரப்பூண்டு :இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7.நிலவேம்பு :நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8.பூலாங்கிழங்கு :
கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9.ஓமவள்ளி :


கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10.அருகம்புல் :அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11.ஆடாதொடை :எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனைமீசை மற்றும் விஷநாராயணி:


Image result for பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13.நொச்சி :


Image result for நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14.தழுதாழை :


Image result for தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15.கழற்ச்சி :


Image result for கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்” என்றார்கள் ..

Monday, 8 July 2019

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும்"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"  என்ற பழமொழிக்கேற்ப நம்  உண்ணும் உணவில் அதிகமானால் என்ன தீமைகள் ஏற்படும் என்று பார்ப்போம் 

பச்சரிசி அதிகமானால் - சோகை நோய். 

அச்சுவெல்லம் அதிகமானால் - அஜீரணம். 

பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.

பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்.

எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.

மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

மிளகாய் அதிகமானால் - வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.

வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதனை உணர்ந்து உணவின் அளவு இருத்தல்முளைக்கட்டிய பயிரின் நன்மைகள்

Image may contain: text

பூ இருக்கும் தேங்காயில் உள்ள நன்மைகள்


கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. நம்பிக்கையெல்லாம் தாண்டி, அறிவிய பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும்.

தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இள நீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி 
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்பூ கொடுக்கும்.

எனர்ஜியை தரும் 
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

ஜீரண சக்திக்கு
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது.

சர்க்கரை வியாதிக்கு
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

இதயம்
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

தைராய்டு
நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

புற்று நோய்
ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

உடல் எடை 
உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.

சிறு நீரகம் 
சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

முதுமை 
தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் மாற்றங்கள்


கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள் போன்றவை அடங்கியுள்ளது.

இதைபோல தான் கேரட் ஜூஸை தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும் ஏற்படும்.

அந்தவகையில் கேரட் ஜூஸை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள்.

கேரட் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

கேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும்.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

கேரட் ஜூஸை அன்றாடம் குடித்து வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரும் அபாயம் குறையும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், தினமும் காலையில் கேரட் ஜூஸில் பசலைக்கீரை ஜூஸை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிட்ன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.

தினமும் கேரட் ஜூஸை குடிப்பதால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகி, அவற்றின் செயல்பாடு வேகப்படுத்தப்படும்.

கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடலில் இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை வழங்கும்.

புகைப்பிடிப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருதன் மூலம், சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

பப்பாளியின் மகத்துவம்


பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும் . பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும் .
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும் .
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

கிட்னியில், உள்ள கல் வெளியேற இரணகள்ளி


இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் ( அதை சுத்தம் செய்து ) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் ! 4 வது, நாள்...!

 கிட்னியில், உள்ள கல் வெளியேறி விடும்...! இதை, அறிய சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் ! குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு, வாய்ப்பே இல்லை

வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மைகள்


பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
சித்தவைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் படி மனிதர்களுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)' போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறதாம். இது முற்றிலும் சரியான காரணமாகும்.
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான விகிதத்தில் உடலில் இருந்தால் நோய் வராது என்பதை விட நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.
இன்று 30 வயதிற்கு மேல் ஆனாலே எலும்புகள் வழுவிழந்துவிடுகிறது. இப்போது வயதானவர்களுக்கு எலும்புகள் எளிதில் உடைந்து விடும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்த சாதாரண எலும்பு முறிவு பல நேரங்களில் வயதானவர்களுக்கு மரணத்தை பரிசாக தந்தது.
ஆனால் அந்த காலத்தில் தாம்பூலம் போடும் பழக்கத்தால், வயதனாவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருந்தது.
வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.
உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய வெற்றிலை போடும் பழக்கத்தை பலர் தவறான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.
இன்று பலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு புகையிலையிலையும் சேர்த்து சாப்பிடுவது தீய பழக்கமாகும்.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. இது இடையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கமாகும்.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறை நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

சப்போட்டாவின் நலன்கள் 


சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.

இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது*.

சப்போட்டாவின் நலன்கள் பற்றிப் பார்ப்போம்
கண்களுக்கு நல்லது
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது. அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட வேண்டும்.*

புற்றுநோய்களை தடுத்தல்:
வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது*.

ஆரோக்கியமான எலும்புகள்:
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

மலச்சிக்கல் நிவாரணம்
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது.*

சிறுநீரகக் கற்கள்
சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது

விளாம்பழம்


யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறண்ட கூந்தல்,முகத்தில் ஏற்படும் வறட்சி உள்ளவர்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்".
பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும்.
ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு.
இதை அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும் இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.....
பல் எலும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு வெளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம்.
மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிஉதிரபோக்கு வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் பாம்புகடியின் வீரியத்தை குறைக்க வல்லது இது அகத்தியர் குணபாடத்தில் கனிகளிலேயே முதன்மையானது விளாம்பழம் என்பதையும் நோக்குவோம்.
பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற குறிப்பையும் கவனிப்போம் .
யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம் இதை சாப்பிடும் போது உள்ளே உள்ள சதைகளை மட்டுமே கிரகித்து கொண்டு ஓடு மட்டுமே சாணத்தில் இருக்கும்.
அதை உடைத்து பார்த்தால் ஏதோ சாம்பல் மாதிரி இருக்கும் இதை பார்த்தவர்கள் யாராவது உண்டு என்றால் யானை சாணியில் இருக்கும் விளாம்பழத்தின் ஓட்டின் புகைப்படத்தை இணைக்கவும்.
பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம் வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ கிரீம்களோ கிடையாது அனுபவத்தில் பலபேர் உணர்ந்தது.
தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும் ...
மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணமல் போகும் ....
கிராமங்களில் காமத்திற்காக அதிக பெண்களை தேடும் நபருக்கு அவருக்கே தெரியாமல் அவரது மனைவியோ அம்மாவோ இந்த ஓட்டின் பவுடரை பொடி ஆக்கி உணவில் கலந்து ஆண்களுக்கு கொடுக்க விந்தணு நீர்த்து போவது மட்டுமல்ல காம உணர்ச்சி முற்றிலும் மட்டுப்படும் "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு"இது தான் பொருள் மேலே உள்ள கூற்றுக்கு.
இதன் சூட்சமத்தை வரும் காலங்களில் உணரலாம் .
மேலும் வரப்புகளில் மரம் வளர்க்க விரும்புவர்கள் இந்த மரத்தை வளர்க்க முயலுங்கள் இதில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்து இருக்கிறது.

 புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்

Image result for வெள்ளை அவல்
அவல்... தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒன்று. ‘ஹெல்தியான காலை மற்றும் மாலை உணவு’ என்று இதைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இரண்டில் எது பெஸ்ட், அவல் தரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன, எப்படிச் சாப்பிடலாம் என்பதையெல்லாம் விளக்குகிறார் உணவியலாளர் கற்பகம்.

சிவப்பு அவல்
இது, பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான்.
பலன்கள்...
* நீண்ட நேரத்துக்குப் பசிக்காது.
* உடலை உறுதியாக்கும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
* குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* பசியைப் போக்கும்.
* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
* உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.
* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.
* மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்கும்.
* புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும்.
* வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.
* பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள், நெல்லை வாங்கி, 2 மணி நேரம் ஊறவைத்து, இடித்து அவலாக்கிப் பயன்படுத்தலாம். சத்துகள் சேதாரமில்லாமல் அப்படியே கிடைக்கும். இன்று சிறுதானியங்களின் அவல்கூட கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். நெல் அவலை விட தானிய அவலில் சத்துகள் அதிகம். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
எப்படிச் சாப்பிடலாம்?
* பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.
* வேர்க்கடலை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து உண்ணலாம்.
* வெந்நீர், பால், ஜூஸ், தயிரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
* நெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.
* பாயசம், புட்டு, கஞ்சி, உப்புமா... என சமைத்துச் சாப்பிடலாம்.
* நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.

வெள்ளை அவல்

Image result for வெள்ளை அவல்
இது, தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

பலன்கள்
* எளிதில் செரிமானமாகும்.
* உடனடி எனர்ஜி தரும்.
* சமைப்பதற்கு எளிதானது.
* உடல்சூட்டைத் தணிக்கும்.
* செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.
* உடல் எடையைக் குறைக்கும்.
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கர்நாடகா ஸ்பெஷல் காராமணி சாதம் 


தேவையானவை: 

அரிசி                         – ஒரு கப், 
காராமணி பயறு – ஒரு கப், 
நறுக்கிய சின்ன வெங்காயம் – தலா கால் கப், தக்காளி – 2, பூண்டு – 10 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 6, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
காராமணியை வெறும் கடாயில் வறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் நீக்கி தட்டவும். வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் எண்ணெயை காய வைத்து, சீரகம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, மீதமுள்ள காராமணி, இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.